கர்நாடகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் அரசு திட்டவட்ட அறிவிப்பு
கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் கர்நாடகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வருகிறது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கர்நாடக அரசின் இந்த இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரை உலகினர், உணவக உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
Related Tags :
Next Story