கான்பூர் மெட்ரோ ரெயில் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் வரை பயணம் மேற்கொண்டார்.
கான்பூர்,
உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி, மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையிலான 9 கி.மீ. தூர பிரிவு வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் வரை பயணம் மேற்கொண்டார். கான்பூரில் மொத்த மெட்ரோ ரயில் தூரம் 32 கி.மீ ஆகும். இத்திட்டம் மொத்தம் ரூ.11,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையிலான தொலைவு சாதனை அளவாக 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. நகர்புற இயக்கத்தை மேம்படுத்துவது பிரதமர் மோடி கவனம் செலுத்தும் முக்கிய துறைகளில் ஒன்றாகும். எனவே, இயக்கத்தில் மற்றொரு படியாக மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
Related Tags :
Next Story