பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை - மத்திய சுகாதாரத்துறை


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை - மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 28 Dec 2021 4:21 PM IST (Updated: 28 Dec 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும். 

முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 

இந்த நிலையில், 60-வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவரின் ஆலோசனை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story