டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்வு


டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்வு
x
தினத்தந்தி 28 Dec 2021 8:24 PM IST (Updated: 28 Dec 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

மும்பையை பொருத்தவரையில் இன்று ஒரே நாளில் 1,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 496- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பு நேற்றை விட 50 சதவீதம் இன்று அதிகரித்துள்ளது டெல்லி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும். 

டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.89-சதவிகிதமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று  331- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல், புதிதாக 142 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மும்பையை பொருத்தவரையில் இன்று ஒரே நாளில் 1,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் நேற்றை விட தொற்று பாதிப்பு 70 சதவீதம் அதிகரித்துள்ளது. 

Next Story