கேரளா: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ரூ.215 கோடிக்கு மது விற்பனை


கேரளா: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ரூ.215 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 28 Dec 2021 9:46 PM IST (Updated: 28 Dec 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையின் கேரளாவில் 215 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 215 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பீவ்கொ நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதனை ஒட்டியுள்ள நாட்களில் கேரளாவில் மொத்தம் 215 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் 73 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பீவ்கொ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story