மோசமான வானிலை: வான்வெளி பயணத்தை தவிர்த்து லக்னோவுக்கு காரில் சென்ற பிரதமர் மோடி..!
மோசமான வானிலை காரணமாக வான்வெளி பயணத்தை தவிர்த்து விட்டு கான்பூரில் இருந்து லக்னோவுக்கு காரிலேயே பிரதமர் மோடி சென்றார்.
கான்பூர்,
பிரதமர் மோடி இன்று கான்பூர் பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின் அங்கிருந்து லக்னோவுக்கு வான்வெளி பயணம் மூலம் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக வான்வெளியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கான்பூரில் இருந்து லக்னோவுக்கு காரிலேயே பிரதமர் மோடி சென்றார். 80 கி.மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி சாலைப் பயணம் மேற்கொண்டதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காரில் லக்னோ வந்த பிரதமர் மோடி, டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.
Related Tags :
Next Story