கொரோனா எல்லாம் இல்லை; சர்ச்சையை கிளப்பிய முனி கோவில் பூசாரி


கொரோனா எல்லாம் இல்லை; சர்ச்சையை கிளப்பிய முனி கோவில் பூசாரி
x
தினத்தந்தி 29 Dec 2021 4:41 AM IST (Updated: 29 Dec 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசெல்லாம் இல்லை என கூறி கபில் முனி கோவில் தலைமை பூசாரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெற்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கபில் முனி கோவில் அமைந்துள்ளது.  இதன் தலைமை பூசாரியாக இருப்பவர் கியான் தாஸ்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரியில் நடைபெறும் கங்காசாகர் மேளா நிகழ்ச்சி பிரபலம் வாய்ந்தது.  கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் தாஸ் கூறும்போது, கொரோனா வைரசெல்லாம் இல்லை.  இந்த மதஸ்தலத்திற்கு வருவதனை பக்தர்கள் நிறுத்தி கொள்ளமாட்டார்கள்.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் எந்த நிகழ்ச்சியும் இல்லை.  அதனால், கங்காசாகர் மேளாவுக்கான வருகையை பக்தர்களால் நிறுத்தி கொள்ள முடியாது என கூறியுள்ளார்.


Next Story