தெலுங்கானாவில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை...!

தெலுங்கானாவில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தெலுங்கானாவில் இன்று 235 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 81 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 204 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை தெலுங்கானாவில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 24 ஆக உள்ளது.
Related Tags :
Next Story