ஜனவரி 10-ந்தேதி முதல் துணை ராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - உயர் அதிகாரி தகவல்
துணை ராணுவ வீரர்களுக்கு 10-ந்தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரானின் வேகம் அதிகரித்து வருவதை தெடர்ந்து இந்தியாவில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைப்போல 10-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் துணை ராணுவப்படைகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி. போன்ற பிரிவுகள் முன்கள பணியாளர்கள் பட்டியலில் உள்ளன. எனவே இந்த துணை ராணுவ வீரர்களுக்கு 10-ந்தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுமார் 3.25 லட்சம் வீரர்களை கொண்ட சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் 99.74 சதவீதம் பேர் இரு டோஸ்களையும் போட்டிருப்பதாகவும், தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வேகம் எடுத்திருப்பதால் அது குறித்து வீரர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சி.ஆர்.பி.எப். மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story