இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்வு


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 Dec 2021 5:13 AM GMT (Updated: 30 Dec 2021 5:13 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்து உள்ளது.



புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன.  எனினும், புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 781 ஆக இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

நாட்டில், டெல்லி 263, மராட்டியம் 252, குஜராத் 97 ஆகியவை அதிக ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன.  இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலுங்கானா 62 ஆகியவை உள்ளன.  தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.  இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதுவரை மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.


Next Story