மீண்டும் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது : மம்தா பானர்ஜி


மீண்டும் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது : மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 30 Dec 2021 5:41 PM IST (Updated: 30 Dec 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல் - மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா;

மேற்கு வங்காளத்தின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவுக்கு சென்றபோது  முதல் - மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது  ;

மேற்கு வங்காளத்தில் மீண்டும் அனைத்து இடங்களிலும் கொரோனா  கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. கட்டுப்பாடுகள் விதித்தால் கடந்த 2 ஆண்டை போல பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் .கொரோனா அதிகரிக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் .

 கொல்கத்தாவில் இதுவரை பதிவாகியுள்ள ஒமைக்ரான் தொற்று அனைத்தும் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.  மத்திய அரசு ஒமைக்ரான் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story