ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப் படவில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்


ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப் படவில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
தினத்தந்தி 31 Dec 2021 4:59 PM IST (Updated: 31 Dec 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து இன்று விவாதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

46- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது;- 

எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை மாற்றியமைப்பது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து இன்று விவாதிக்கப்படவில்லை .  ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப் படவில்லை” என்றார். 

Next Story