முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சகோதரி அன்ஜூ சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்


முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சகோதரி அன்ஜூ சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்
x
தினத்தந்தி 31 Dec 2021 10:01 PM IST (Updated: 31 Dec 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரி  அன் ஜூ சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.  இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ வீரேந்திர சேவாக்கின் சகோதரி அன்ஜு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

அவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். ஆசிரியரான அன்ஜூ சேவாக், அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story