பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: மனம் வருந்தி அணுகுமுறையை மாற்ற வேண்டிய நேரம் ப.சிதம்பரம் கருத்து
நடப்பு 2021-2022 நிதியாண்டின் இறுதியில் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது.
புதுடெல்லி,
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நடப்பு 2021-2022 நிதியாண்டின் இறுதியில் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், 31-3-2022 அன்று ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 31-3-2020 அன்று இருந்ததுபோல் இருக்கும்.
அதாவது, 31-3-2020 அன்று நாம் இருந்த நிலைக்கு திரும்ப 2 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இந்த 2 ஆண்டுகளில், லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். 84 சதவீத குடும்பங்கள், வருவாய் இழப்பை சம்பாதித்துள்ளன.
4 கோடியே 60 ஆயிரம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலக பட்டினி குறியீட்டில் 116 நாடுகள் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில் உள்ளது.
எனவே, இது மனம் வருந்துவதற்கும், அணுகுமுறையை மாற்றுவதற்குமான நேரம். தற்பெருமைக்கும், மாற மாட்டோம் என்பதற்குமான நேரம் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story