நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நிகழ்த்தியது மத்திய அரசின் தோல்வியை உணர்த்தும் உரை காங்கிரஸ் கருத்து


நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நிகழ்த்தியது மத்திய அரசின் தோல்வியை உணர்த்தும் உரை காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2022 2:04 AM IST (Updated: 1 Feb 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை காங்கிரஸ் குறைகூறியுள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘அவர்கள் (அரசு) கூறிய எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் மோடி வெளியில் என்ன கூறியிருந்தாரோ, அதையே ஜனாதிபதி தனது உரையில் திரும்பத் திரும்பச் சொன்னார். ஜனாதிபதி உரையில் முக்கியமான அம்சம் எதுவும் இல்லை. ஜனாதிபதியின் உரையானது அரசின் தோல்வியை உணர்த்தும் உரை ஆகும்’ என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் ஜனாதிபதி உரை வாயிலாக பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கூறிய கார்கே, அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக அரசு கூறியிருந்த நிலையில், அரசில் 32 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், ஆனால் அது பற்றி பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story