கேரளாவில் பிரபல பாம்பு பிடி மன்னனை பாம்பு கடித்தது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கேரளாவில் பிரபல பாம்பு பிடி மன்னனை பாம்பு கடித்தது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 1 Feb 2022 5:47 AM IST (Updated: 1 Feb 2022 5:47 AM IST)
t-max-icont-min-icon

பாம்பு வலது காலில் கடித்தது. இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார்.

திருவனந்தபுரம், 

கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின்

வலது காலில் கடித்தது. இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார். அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story