“நடுத்தர மக்களுக்கு துரோகம்” - மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Feb 2022 3:01 PM IST (Updated: 1 Feb 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட், சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு துரோகம் இழைப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு மத்திய பட்ஜெட் துரோகம் இழைப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும்  நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர். 

ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் தங்கள் நடவடிக்கைள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம்” என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். 

Next Story