ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்துமா..?
ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடான ‘பிஏ.2’, இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்பட 35க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
புதுடெல்லி,
கொரொனா வைரசின் கோர தாண்டவத்தில் உலகம் சிக்கி அவதிப்பட்டு வரும் நிலையில், ஒமைக்ரான் வைரசால் ஏற்பட்ட மூன்றாவது அலையால் உலகெங்கும் தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடான ‘பிஏ.2’, இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்பட 35க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த புதிய வகை மாறுபாடால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை அறியலாம்.
ஒமைக்ரான் வைரஸ் மூன்று விதமான மாறுபாடுகளை கொண்டது. அவை பிஏ.1, பிஏ.2, பிஏ.3 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது, டென்மார்க்கில் ஏற்பட்டுள்ள கொரோனா பதிப்புகளில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புகள் இந்த புதிய வகை மாறுபாடான பிஏ.2வால் தான் ஏற்படுகிறது.
ஆனால், முதற்கட்ட ஆய்வில், இந்த மாறுபாடு தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில், இந்த புதிய மாறுபாடு எந்தெந்த பகுதிகளில் பரவி வருகிறது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், தற்போதைய கொரோனா அலையில் ஒமைக்ரான் பிஏ.1 வகை வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story