பட்ஜெட் 2022:எந்த பொருள் விலை குறைகிறது? எதன் விலை அதிகரிக்கும்...?


பட்ஜெட் 2022:எந்த பொருள் விலை குறைகிறது? எதன் விலை அதிகரிக்கும்...?
x
தினத்தந்தி 1 Feb 2022 5:28 PM IST (Updated: 1 Feb 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

2022 பட்ஜெட்டின் வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், சில பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது. சில பொருட்களின் விலை குறையவுள்ளது.

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார்.இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சரியாக 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத்  தொடங்கிய அமைச்சர் 12.30 மணிக்கு நிறைவு செய்தார். 

* பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு

* குடைக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் ஆக உயர்வு

 * ஆடைதயாரிப்பு  தோல்பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரிகுறைப்பு

* மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை

* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

* அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு 

விலை குறையவுள்ள பொருட்கள்:

ஆடைகள்,ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள்,செல்லுலார் மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்,மொபைல் போன் சார்ஜர்கள்,உறைந்த சிப்பிகள்,உறைந்த கடம்பா மீன்கள் ,பெருங்காயம்,கோகோ பீன்ஸ்,மெத்தில் ஆல்கஹால்,அசிட்டிக் அமிலம்,பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள்,எஃகு ஸ்கிராப்கள் 

விலை உயரவுள்ள பொருட்கள்: 

குடைகள்,கவரிங் நகைகள்,ஒலிபெருக்கிகள்,ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்,ஸ்மார்ட் மீட்டர்,சூரிய செல்கள்,எக்ஸ்ரே இயந்திரங்கள்,மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.

Next Story