நாட்டில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது - மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி,
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
ஜனாதிபதி உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை.
ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது.
2021ல் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என்று பேசுகிறீர்கள், ஆனால் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களிடம் இருந்த வேலைவாய்ப்பு காணாமல் போய்விட்டது.
புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டாலும் வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை தேவை. வேலை வாய்ப்பை உருவாக்குவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில் நாட்டில் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.
பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறு மற்றும் குறு தொழில்களை மத்திய அரசு அழித்துவிட்டது.
உதவி கிடைக்காமல் சிறுகுறு தொழில்கள் நசிந்துள்ளன. பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன என்றார்.
முந்தைய காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. இது எங்கள் தரவு அல்ல, இது உண்மை தரவு. 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளீர்கள். பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை ஆள முடியாது. உங்களால் அதை சாதிக்கவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story