புதுச்சேரி: 9 மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கடிதம்


புதுச்சேரி: 9 மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கடிதம்
x
தினத்தந்தி 2 Feb 2022 9:58 PM IST (Updated: 2 Feb 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி: 9 மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி, 

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-மந்திரி ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  மத்திய வெளியுறவுத் துறை மந்திரி  ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கடிதம்  எழுதி உள்ளார்.

அதில்,  எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 31-ந்தேதி சிறைபிடித்தனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களில் காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த வளர்செல்வம் (24), எழிலன் (26), பிரகலாதன் (17), விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தை சேர்ந்த பன்னீர் (42), சீர்காழி அர்ஜூன் (34), நாகப்பட்டினம் பரதன் (23), அருள்ராஜ் (22), மயிலாடுதுறை சந்திரன் (50), சீர்காழி விக்ரம் (17) ஆகியோர் ஆவர்.

அவர்களை விடுவிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மீனவர்களின் குடும்பத்தினர் தமிழகம், புதுச்சேரி அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநியைில் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 9 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Next Story