கண்ணில் அட்டை புகுந்ததாக கருதி கண்ணை பிடுங்கி எறிந்த முதியவர்
சிமோகா அருகே முதியவர் ஒருவர் கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கருதி கண்ணை பிடுங்கி எறிந்துள்ளார்.
பெங்களூர்
கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று எண்ணி தனது கைகளாலே ஒரு கண்ணை பிடுங்கி கீழே போட்டுள்ளார்.
பின்னர் தனது பேரனை கூப்பிட்டு கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கூறியுள்ளார் . கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்கும்படி கூறியுள்ளார். பேரனும் காலை எடுத்து கண்ணை நசிக்கி உள்ளார்.
பின்னர் வலி தாங்காத பெரியவர் அழுது புலம்பும் போது அங்கு வந்த மகன் என்ன என்று கேட்டபோது பேரன் நடந்த தகவலை கூறிஉள்ளார். முதியவரை மீட்ட அப்பகுதியினர் ஷிமோகாவில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Related Tags :
Next Story