கொலை செய்யப்பட்டு நெடுஞ்சாலையில் வீசப்பட்ட இளம் பெண்கள் உடல்கள்
சண்டிகர்-சிம்லா நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சண்டிகர்,
சண்டிகர்-சிம்லா நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பர்வானூவில் உள்ள கோடி ரயில்வே சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று மாலை அடையாளம் தெரியாத இரண்டு நேபாளப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சோலன் போலீஸ் சூப்பிரண்டு வீரேந்தர் சர்மா மற்றும் பர்வானூ துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் ரோல்டா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட உடல்களை பறிமுதல் செய்தனர்.
இறந்தவரில் ஒருவர் 20 வயதுக்கு இடைப்பட்டவராகவும், மற்றொருவர் 30 வயதுக்கு இடைப்பட்டவராகவும் இருப்பதாகவும், குப்பை வியாபாரி ஒருவர் உடல்களை பார்த்து, உள்ளூர்வாசி ஒருவருக்கு தகவல் கொடுத்ததாகவும், அவர் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அதன்பிறகு போலீசார் அழைக்கப்பட்டதாகவும் சர்மா கூறினார்.
இவர்கள் வேறு ஏதாவது இடத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம், பின்னர் உடல்களை பர்வானூ அருகே வீசியிருக்கலாம் என்றும் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜுங்காவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story