ராமர் பாலம் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? - சுப்பிரமணியன் சுவாமி கேள்வி..!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ராமர் பாலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story