ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு கவர்னர் தேவையற்றது - திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்


ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு கவர்னர் தேவையற்றது -  திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்
x
தினத்தந்தி 3 Feb 2022 7:24 PM IST (Updated: 3 Feb 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக எம்.பி., டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.

புதுடெல்லி, 

தமிழக கவர்னரை திரும்ப பெற கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டனர்.  தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். 

நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக  ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையற்றது என்று அண்ணா கூறியதை மேற்கோள் காட்டி தமிழக கவர்னரை திரும்பப்பெற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். 

Next Story