துப்பாக்கிச் சூடு சம்பவம்: சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் - ஓவைசி


துப்பாக்கிச் சூடு சம்பவம்:  சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் - ஓவைசி
x
தினத்தந்தி 3 Feb 2022 8:57 PM IST (Updated: 3 Feb 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசம், மீரட்டின் கிதாவுரில் தேர்தல் பிரசாரம் முடித்து புறப்பட்டபோது எனது காரின் மீது 4 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி சென்றார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு டெல்லி திரும்பிய போது சாஜர்சி சுங்கச்சாவடி  எனது காரின் மீது 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். 3-4 ரவுண்டு முறை சுட்டனர். அவர்கள் மொத்தம் 3-4 பேர் இருக்கும்.  எனது வாகனத்தின் டயர்கள் பஞ்சரானதால், வேறு வாகனத்தில் சென்றுவிட்டேன்
என அதிர்ச்சியுடன் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசிதெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் சுதந்திரமான விசாரணை நடத்துவது உ.பி அரசும் மோடி அரசும் தான் பொறுப்பு. இது தொடர்பாக மக்களவை சபாநாயகரையும் சந்திப்பேன் என்றார்.

இதனிடையே  ஓவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயுதங்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக  உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story