சந்திரயான்-3 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்படும் - மத்திய மந்திரி தகவல்
சந்திரயான்-3 வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளி துறையின் மத்திய இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2ல் இருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3ஐ வெற்றிகரமாக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் வரை, 8 ராக்கெட் செலுத்தும் திட்டங்கள், 7 விண்கலத் திட்டங்கள், 4 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் உள்பட 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேவையால் பல்வேறு திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story