இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சற்று குறைந்தது...!


இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சற்று குறைந்தது...!
x
தினத்தந்தி 4 Feb 2022 9:29 AM IST (Updated: 4 Feb 2022 9:29 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.49 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பு சரிந்து வந்தது. நேற்று இதில் லேசான மாறுதல் ஏற்பட்டது. இந்தநிலையில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்து வருகிறது. 

இந்தியாவில் ஒரே நாளில் 1,49,394 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  நேற்று 1,72,433 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 1,49,394 ஆக குறைந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 2,46,674 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்தியாவில் நேற்று 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,072 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்து 983 லிருந்து 5,00,055 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 55,58,760 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 168.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம்  வெளியிட்டது.

Next Story