இமாசல பிரதேசத்தில் கடும் பனி பொழிவுக்கு இடையே இயங்கிய ரெயில்
இமாசல பிரதேசத்தில் கடும் கடும் பனி பொழிவுக்கு இடையே ரெயில் சேவை இயங்கியது.
சிம்லா,
வடமாநிலங்களில் குளிர்கால சூழலை முன்னிட்டு கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு குளிர் வாட்டி வருகிறது.
வாகனங்கள், தெளிவற்ற வானிலையால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இவற்றில் இமாசல பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகள், சாலைகள் என பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவால் வெண்போர்வை போர்த்தியது போன்று பனி அடர்ந்து காணப்படுகிறது.
எனினும், இந்த பனிப்பொழிவிலும் சிம்லா நகரில் ரெயில் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது. ரெயில் தண்டவாள பகுதியில் பனி சூழ்ந்த நிலையில், ரெயில் ஒன்று மெல்ல ஊர்ந்து செல்லும் காட்சி பதிவு வெளிவந்துள்ளது.
Related Tags :
Next Story