பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்
வெண்டிலேட்டர் உதவியுடன் பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை,
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.
Related Tags :
Next Story