வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - தந்தை மகன் கைது
இடுக்கி அருகே வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர்
திருவனந்தபுரம்
இடுக்கி மாவட்டம் உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சன்னி (வயது 34). இவருக்கு சொந்தமான வீட்டில் உப்புத்துறையை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் (60), அவரது மகன் சஞ்சு (35) ஆகியோர் வாடகைக்கு இருந்துவந்தனர்.
இவர்கள் கடந்த 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சன்னி, வாடை தாருங்கள் இல்லை எனில், வீட்டை பூட்டி சாவியை தாங்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த குஞ்சுமோன் தனது மகன் மற்றும் உறவினர் பென்னி ஆகியோருடன் சேர்ந்து வீட்டு உரிமையாளர் சன்னியையும் அவரது மகனையும் அரிவாளால் வெட்டினர்.
வெட்டுக்காயம் அடைந்தவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த உப்புத்துறை போலீசார், குஞ்சுமோன் ஜார்ஜ், அவர் மகன் சஞ்சு உறவினர் பென்னி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story