லதா மங்கேஷ்கர் மறைவு: தேர்தல் அறிக்கை வெளியீட்டை ஒத்திவைத்தது பாஜக
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று வெளியிடப்பட்ட இருந்த உ.பி.யின் அறிக்கையை பாஜக ரத்து செய்தது.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன.
பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட இருந்தது. ஆனால், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை பாஜக ஒத்திவைத்துள்ளது.
லக்னோவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், கட்சித் தலைவர்கள் சுதந்திர தேவ், கேசவ் மவுரியா ஆகியோர் பங்கேற்கும் பாஜகவின் நிகழ்ச்சி கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story