நடிகர் விஜய்யை ரங்கசாமி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை; அமைச்சர் நமச்சிவாயம்


நடிகர் விஜய்யை ரங்கசாமி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை; அமைச்சர் நமச்சிவாயம்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:42 PM GMT (Updated: 2022-02-07T04:12:30+05:30)

நடிகர் விஜய்யை ரங்கசாமி சந்தித்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


புதுச்சேரி,புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதி்ல் அளித்த நமச்சிவாயம், ‘முதல்-அமைச்சர் ரங்கசாமிதான், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார். அவர் நடிகர் விஜய்யை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் சந்திப்பு தொடர்பான யூகங்களுக்கு பதில் தர முடியாது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது’ என்று கூறினார்.


Next Story