இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் மேலும் 83,876 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,07,474 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 83,876 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,21,88,138 லிருந்து 4,22,72,014 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 74.15 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே நாளில் 11,56,363 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 895 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
நேற்று 865 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 895 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,979 லிருந்து 5,02,874 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,08,938 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,99,054 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,61,148 லிருந்து 4,06,60,202 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 169.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரட்தில் 14,70,053 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story