ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
1967-க்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை என பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் பேசினார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
- ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக சென்று சேருகிறது.
- ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயன் அடையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
- அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர்
- இன்று ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வசதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
- நாட்டில் உள்ள ஏழைமக்கள் இன்று எரிவாயு இணைப்பு, கழிவறை வசதிகளை பெற்று வருகின்றனர்.
- ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர்(எதிர்க்கட்சிகள்) இன்னும் 2014-ஆம் ஆண்டிலேயே உள்ளனர்.
- பல மாநிலங்களில் காங்கிரசை ஆட்சியில் அமரவைக்க மக்கள் விரும்பவில்லை.
- 1962-க்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
- காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல மாநிலங்களில் கைவிட்டு போன பிறகும் கூட அகங்காரம் குறையவில்லை.
Related Tags :
Next Story