தமிழகம்- கர்நாடகா இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி: மத்திய அரசு


தமிழகம்- கர்நாடகா இடையே  உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி: மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Feb 2022 7:53 PM IST (Updated: 7 Feb 2022 7:53 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணையைக் கட்ட முயல்கிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற  இணை மந்திரி அஸிவினி குமார், “ மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும். மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story