கோவா சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் கட்காரி


கோவா சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் கட்காரி
x
தினத்தந்தி 8 Feb 2022 3:56 AM IST (Updated: 8 Feb 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

கோவா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நிதின் கட்காரி இன்று வெளியிட உள்ளார்.




பனாஜி,



கோவாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  கோவாவில் ஆளும் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி இன்று வெளியிட உள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்க மறைவால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் கோவாவில் விமான நிலையத்திற்கு வருகை தரும் கட்காரி, அதன்பின் பனாஜி நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.  அவர் இன்று மதியம் 12.30 மணியளவில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.


Next Story