கொரோனா பரவல் குறைவு: மும்பையில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது


கொரோனா பரவல் குறைவு: மும்பையில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது
x
தினத்தந்தி 8 Feb 2022 8:53 PM IST (Updated: 8 Feb 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இந்த மாத இறுதியில் கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறினார்.

மும்பை,

ஒமைக்ரான் அலை தொடங்கியதில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு  இன்று மும்பையில் பாதிப்பு 500-க்கு கீழ் சரிந்தது. நகரில் நேற்று  356 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

இதேபோல மராட்டியத்திலும் 6 ஆயிரத்து 436 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 39 நாட்களுக்கு பிறகு மாநிலத்தில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு ஆகும். அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் குறைந்த அளவில் மட்டும் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த மாத இறுதியில் மும்பையில் கட்டுபாடுகள் தளர்த்தப்படலாம் என மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறினார். மேலும் அவர், " நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொது மக்கள் முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம். " என்றார்.

Next Story