10 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு இலவச உணவு; அசத்தும் ஓட்டல் உரிமையாளர்


10 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு இலவச உணவு; அசத்தும் ஓட்டல் உரிமையாளர்
x
தினத்தந்தி 9 Feb 2022 6:19 AM IST (Updated: 9 Feb 2022 6:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா, ஹிஜாப் விவகார சூழலிலும் பசித்த வயிறுக்கு ஓட்டல் உரிமையாளர் ஒருவர் உணவு வழங்கும் சேவையை தொடர்ந்து வருகிறார்



உடுப்பி,


கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா, ஹிஜாப் விவகாரம் என பல்வேறு சூழல்களிலும் பணம் எதுவும் பெற்று கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார் ஒருவர்.  உடுப்பி நகரில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் நசீர் அகமது.

தினமும் மதியம் மற்றும் இரவில் 4 கிலோ கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஆதரவற்ற உணவு தேவையாக உள்ளோர்களுக்கு சாதி, மத வேற்றுமையின்றி அதனை வழங்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மனிதநேயமே முதலில் வருகிறது.  என்னுடைய குடும்பத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என 11 பேர்.  உணவின்றி இருந்த சூழல்களை நாங்கள் சந்தித்துள்ளோம்.

அதனாலேயே எனக்கு வசதி கிடைத்தபோது, கடந்த 10 ஆண்டுகளாக தேவையான மக்களுக்கு உணவு வழங்கும் செயலை ஒருபோதும் நிறுத்தவில்லை என கூறியுள்ளார்.  இந்த மனிதநேய செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவரை அந்த பகுதியில் வசிக்கும் பலரும் கடவுள் என அழைக்கின்றனர்.


Next Story