தேசிய கொடி இறக்கி, காவி கொடி ஏற்றிய விவகாரம்:எஸ்பி விளக்கம்
இந்து மாணவர் ஒருவர், கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து அதற்கு பதிலாக காவி கொடியை கட்டினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பர்தா, காவி உடை அணியும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிவமொக்கா டவுன் பி.எச். சாலையில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது இந்து மாணவர் ஒருவர், கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து அதற்கு பதிலாக காவி கொடியை கட்டினார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தடியடி நடத்தி விரட்டி, காவி கொடியை அகற்றி மீண்டும் தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இது குறித்து சிவமொக்கா எஸ்பி பிஎம் லக்ஷ்மி பிரசாத் கூறியதாவது:-
“தேசிய கொடியை இறக்கிவிட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை. அந்த கம்பத்தில் தேசியக் கொடி இல்லை. வெறுமென இருந்த கம்பத்தில்தான் காவி கொடி ஏற்றப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story