பர்தா விவகாரம்: இந்து-முஸ்லிம் இடையே சண்டையை தூண்டுகின்றனர் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு


பர்தா விவகாரம்: இந்து-முஸ்லிம் இடையே சண்டையை தூண்டுகின்றனர் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Feb 2022 12:00 PM IST (Updated: 9 Feb 2022 12:00 PM IST)
t-max-icont-min-icon

பர்தா விவகாரம் பின்னணியில் அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளன என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கர்நாடகாவில் பர்தா விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்:-

கர்நாடகாவில் பர்தா விவகாரம் வேண்டுமென்றே வாக்குகளைத் துஷ்பிரயோகம் செய்யவும், இந்து-முஸ்லிம் சண்டைகளைத் தூண்டுவதற்கும் செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளன. யாராவது ஒழுங்குமுறைப்படி பணியாற்றவில்லை என்றால், மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

‘‘நீங்கள் காங்கிரஸ், காந்தி, நேரு அல்லது ராகுல் காந்தியை வெறுப்பதாக இருந்தால், பாராளுமன்றத்திற்கு வெளியே அது குறித்து சொல்லவும். அவர் (மோடி) நம்முடைய பிரச்சினைகளான பெகாசஸ், கொரோனா, பணவீக்கம் போன்றவற்றை விட்டுவிட்டார். காங்கிரஸ் எதிர்த்து போரிட்டபோதும், சுதந்திரம் அடைந்த போதும் நாம் பிறக்காமல் கூட இருந்திருக்கலாம். பிரதமர் மோடி, தீர்மானத்தின் நன்றி தெரிவிப்பதை தவறான பயன்படுத்தியுள்ளார். அவருடைய முதன்மையான பணியை விட்டுவிட்டார்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story