உத்தர பிரதேசம் வளர்ச்சியை கண்டு வருகிறது: மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தர பிரதேசம் வளர்ச்சியை கண்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
மும்பை,
உத்தர பிரதேசம் வளர்ச்சியை கண்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது;-
யோகி ஆதித்யநாத் வெற்றிகரமான முதல்வராக திகழ்கிறார். உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பணிகளை அவர் செய்துள்ளார். மாநிலத்தில் குண்டர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியையும் உத்தர பிரதேசம் கண்டு வருகிறது. சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த பணிகளை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், சிறு குறு துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளார்.
நமது வெளியுறவு கொள்கை சரியாகவும், வெற்றிகரமாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் முதன்முறையாக உலகளவில் இந்தியா முத்திரை பதித்துள்ளது. ராகுல் இதனை ஏற்க மாட்டார். அவர் எதிர்ப்பு அரசியல் நடத்துகிறார்” என்றார்.
Related Tags :
Next Story