பாதுகாப்பு குறித்து பெண்கள் கவலைப்படவேண்டாம் - யோகி ஆதித்யநாத்


பாதுகாப்பு குறித்து பெண்கள் கவலைப்படவேண்டாம் - யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 9 Feb 2022 6:00 PM IST (Updated: 9 Feb 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு குறித்து பெண்கள் கவலைப்பட வேண்டாம். அது எங்கள் கடமை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு நாளை (பிப்ரவரி 10) தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலில் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் முராதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பிலாரி பகுதியில் பாஜக கட்சி சார்பில் நடைபெற்ற காணொலி காட்சி மூலம் பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரியும்,  பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு குறித்து பெண்கள் கவலைப்பட வேண்டாம். அது எங்கள் கடமை. வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்கள் கவலைப்பட வேண்டாம். அதுவும் எங்கள் கடமைதான். நமது இளைஞர்களுக்கு இந்த ஆண்டு 1 கோடி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட்களை (Tablets) வழங்க உள்ளோம்’ என்றார்.

Next Story