பர்தா விவகாரம்: 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு விசாரிக்கிறது


பர்தா விவகாரம்: 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு விசாரிக்கிறது
x
தினத்தந்தி 10 Feb 2022 9:23 AM IST (Updated: 10 Feb 2022 9:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு இன்று விசாரிக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) இந்து-முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே கல்லூரி முதல்வர் தடுத்து நிறுத்தினார்.

 இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது.

  இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. முதல் நாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.

  அவர் வாதிடுகையில், ஆடை அணிவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு அவற்றுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தினார்.

  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்தை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பார்கள் என்று அறிவித்திருந்தார்.

இந் நிலையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணைக்கு பின்னர் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஜாப் விவகார வழக்கு தொடர்பாக எனது தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜிவுல்லா முகைதீன் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

Next Story