டெல்லியில் கொரோனா பரிசோதனையை நிறுத்த முடிவு


டெல்லியில் கொரோனா பரிசோதனையை நிறுத்த முடிவு
x
தினத்தந்தி 10 Feb 2022 10:09 AM IST (Updated: 10 Feb 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.



புதுடெல்லி,


நாடு முழுவதும் கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பரவல் ஏற்பட தொடங்கியதும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்ற நகர மருத்துவமனைகளுடன் இணைந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள தேசிய வழிகாட்டுதல்களின்படி, வழக்கம்போல் மேற்கொண்டு வந்த கொரோனா பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, மருத்துவமனையின் உள்நோயாளிகள், சிறிய அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சை, நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன.  இதனால், ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்வது என்ற முடிவை கைவிட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story