வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி


வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 10 Feb 2022 10:26 AM IST (Updated: 10 Feb 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை,

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சர்வதேச நிதியத்தின் கணிப்பின் படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியா தான். 

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, பெரிய பொருளாதாரங்களில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு வேகமாக வளர்ச்சியடைகிறது.

பணப்புழகத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4% ஆக தொடரும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும்.

ரிசர்வ் வங்கியில்  வங்கிகள் செய்யும் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம்  3.35% (ரிவர்ஸ் ரெப்போ) ஆகவே தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story