கார் விபத்தில் சிக்கிய நபரை தனது கைகளில் தூக்கி சென்ற நடிகர் சோனு சூட்


கார் விபத்தில் சிக்கிய நபரை தனது கைகளில் தூக்கி சென்ற நடிகர் சோனு சூட்
x
தினத்தந்தி 10 Feb 2022 12:20 PM IST (Updated: 10 Feb 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

பாலிவுட் நடிகர் சோனு சூட், கார் விபத்தில் சிக்கிய நபரை தனது கைகளில் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

மோகா

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பைபாஸ் சாலையில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த நடிகர் சோனு சூட், விபத்துக்குள்ளான காரின் இருக்கையில் சிக்கி கொண்ட ஓட்டுநரை பக்குவமாக மீட்டு தன் காருக்கு தூக்கி சென்றார். 

காயமடைந்த அந்த நபரை தன் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Next Story