மணிப்பூரில் தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மணிப்பூரில் தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 7:19 PM IST (Updated: 10 Feb 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் தேர்தல் தேதியை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இம்பால்,

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. 

அதன்படி, முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம்கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதிக்கு பதிலாக மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் திட்டமிட்டபடி  மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

Next Story