நேரு நினைத்திருந்தால் சில மணி நேரத்தில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம் - பிரதமர் மோடி பாய்ச்சல்
ஜவகர்லால் நேரு நினைத்திருந்தால் நாடு சுதந்திரமடைந்த சில மணி நேரத்தில் போர்ச்சுகீசியர்களிடமிருந்து கோவாவை விடுதலை செய்திருக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பனாஜி,
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த (1947) பிறகு 15 ஆண்டுகள் கழித்தே (1961) கோவா சுதந்திரம் அடைந்தது என்பது குறித்து பலருக்கு தெரியாது.
சுதந்திரமடைந்த போது இந்தியாவிடம் ராணுவம், வலுவான கடற்படை இருந்தது. கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து சில மணி நேரங்களில் விடுதலை செய்திருக்கலாம்.
ஆனால், 15 ஆண்டுகளாக கோவாவை விடுதலை செய்ய காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஜவகர்லால் நேரு நினைத்திருந்தால் சில மணி நேரங்களில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுதலை செய்ய 15 ஆண்டுகள் எடுத்துள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story