பர்தா விவகாரம்: தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட்டு


பர்தா விவகாரம்: தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 11 Feb 2022 11:25 AM IST (Updated: 11 Feb 2022 11:40 AM IST)
t-max-icont-min-icon

பர்தா தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.



புதுடெல்லி,

பர்தா அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதான வழக்கில்,

பர்தா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில் நடப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். உரிய நேரத்தில் வழக்கை விசாரிப்போம். 

பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story